வி. சாலை கிராமத்தில் ஆடு மேய்த்த முதியவர் மீது இடி தாக்கி பலி

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி. சாலை கிராமத்தில் நேற்று (மே 15) மதியம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்த மணி (60) என்ற முதியவர் மீது பலத்த இடி மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி காவல்துறையினர், உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இடி மின்னலுக்கு முதியவர் பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி