இதைத் தொடர்ந்து லாரியை சோதனையிட்ட போது, அதில் ஒழுங்கற்ற வடிவம் கொண்ட 30 டன் எடை கொண்ட கருங்கற்கள் இருந்தன. இதுகுறித்து லாரியை ஓட்டி வந்த விக்கிரவாண்டி வட்டம், தும்பூர் தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஜெ. சின்னக்கவுண்டரிடம் விசாரித்தபோது, கருங்கற்களை அனுமதியின்றி எடுத்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர். மேலும் லாரியின் உரிமையாளரான வானூர் வட்டம், எறையூரைச் சேர்ந்த நா. விசுவநாதன், விழுப்புரம் வட்டம், கருங்காலிப்பட்டு மதன் ஆகியோர் மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்