விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே, தாழ்வாக இருந்த மின்கம்பிகளைச் சரிசெய்யக் கோரி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், முல்லைப் பூ பறிக்கச் சென்ற அய்யனார் மற்றும் சாந்தி ஆகியோர் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்து மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். காயமடைந்த காமாட்சி சிகிச்சை பெற்று வருகிறார். மின்சார வாரியத்தின் அலட்சியமே உயிரிழப்புகளுக்குக் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ள உறவினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி உள்ளனர்.