விழுப்புரம்: கணவா் இறந்த சோகத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை

கோட்டக்குப்பம், ரஹமத் நகரைச் சேர்ந்த அப்புவின் மனைவி மோனிஷா (26) கணவர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட உறவினர்கள் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி