விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்டமங்கலம் ஒன்றியத்தில், மிட்டாமண்டகப்பட்டு ஊராட்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (06.11.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது விழுப்புரம் வருவாய் வட்டாட்சியர் மகாதேவன், வானூர் வருவாய் வட்டாட்சியர் வித்யாதரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.