விழுப்புரத்திற்கு மழை வெள்ள சேதங்களை பார்வையிட வந்த முதலமைச்சரிடம் எம். பி ரவிக்குமார் மரக்காணம் புளியங்கால் கோடையை தூர்வாரி சீரமைக்குமாறு மனு அளித்திருந்தார். அதன் அடிப்படையில் ரூ.2 கோடியே 70 லட்சத்தில் ஓடையை சீரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் பெற்ற விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமார் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.