விக்கிரவாண்டி அருகே ஒரத்தூரைச் சேர்ந்த விவசாயி வீ.அய்யனார் (71), ஞாயிற்றுக்கிழமை இரவு தெருக்கூத்து நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, மே 4-ஆம் தேதி அதிகாலை தனது வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது விழுப்புரம்-செஞ்சி நெடுஞ்சாலையில், தனியாா் கலைக் கல்லூரி அருகே செஞ்சி நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அய்யனார், விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.