விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், கிளியனூர் காவல் சர்க்கத்துக்குள்பட்ட காட்ராம்பாக்கம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கிளியனூர் போலீஸாரால் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். காட்ராம்பாக்கம் மயானப் பகுதியில் சூதாடியதாக ப. சந்திரசேகர் (39), கு. பாஸ்கர் (54), அய்யனார் (49), மு. சேகர் (40), ஆ. ஈஸ்வரன் (42), ப. ராஜசேகர் (37) ஆகியோர் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து ரூ. 13 ஆயிரம் ரொக்கம், 2 பைக்குகள், 6 கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.