வானூா்: மனநலம் பாதிக்கப்பட்ட பெண் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை

வானூர்: திருமணமாகி 25 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு மகன், மகள் உள்ள குமாரி (45) கடந்த 6 மாதங்களாக மனநலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில், கடந்த மே 14-ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்த அவரை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார். இது குறித்து மயிலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி