அவரது உரையில் போதைப்பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறித்தும், தடுக்கும் வழிமுறைகளைக் குறித்தும் விளக்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக ஆரோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் திரு. செந்தில்குமார், திரு. முத்துக்குமரன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் தனது உரையில் போதைப்பொருட்களால் மாணவ மாணவிகள் எப்படி பாதிக்கப்படுகின்றனர் என்பதை விளக்கினார். சைபர் குற்றங்களைத் தடுப்பது பற்றியும் எடுத்துரைத்தார்.
முன்னதாக போதைப்பொருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர். காந்திமதி அனைவரையும் வரவேற்றார். நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் முனைவர். அருளமுதம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.