விழுப்புரம்: டோல்கேட்டில் 3 ம் தேதி முதல் கட்டணம் வசூல்

விழுப்புரம் - நாகப்பட்டினம் இடையே 186 கி.மீ. தொலைவிற்கு, நான்குவழி சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டமாக விழுப்புரம் - புதுச்சேரி வரை 29 கி.மீ. தூரம் நான்கு வழிச்சாலை பணி முடிக்கப்பட்டு, தற்காலிக பயன்பாட்டில் உள்ளது. இதில் சாலை மற்றும் மேம்பாலங்களில் ஆங்காங்கே ஏற்பட்ட விரிசல்களை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. நூறு சதவீதம் பணிகள் முடிவடையவில்லை. இச்சாலையில் விழுப்புரம் அடுத்த கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் அமைக்கப்பட்டுள்ளது. 

வரும் 3ம் தேதி முதல் வாகனங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. சுங்க கட்டண விபரம்: கார், ஜீப், வேன் உள்ளிட்ட இரு அச்சு இலகு ரக வாகனங்களுக்கு ஒருமுறை பயணத்திற்கு ரூ. 60, இருமுறை பயணத்திற்கு ரூ. 90, மாத பாஸ் கட்டணம் ரூ. 1985, மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒரு முறைக்கு ரூ. 30 கட்டணம் வசூலிக்கப்படும். இலகு ரக வணிக வாகனங்கள், சரக்கு வாகனங்கள் மற்றும் மினி பஸ்களுக்கு, ஒருமுறை கட்டணம் ரூ. 95, இருமுறை கட்டணம் ரூ. 145, மாதாந்திர பாஸ் ரூ. 3210, மாவட்டத்திற்குள் பதிவு செய்த வணிக வாகனங்களுக்கு ஒருமுறை கட்டணம் ரூ. 50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி