வானூர்: 1.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.. 3 பேர் கைது

வானூர் அருகே 1,400 கிலோ ரேஷன் அரிசியைக் கடத்தியதாக தூத்துக்குடியைச் சேர்ந்த ஜோசப், திருவள்ளூரைச் சேர்ந்த ஆனந்தகுமார், விழுப்புரத்தைச் சேர்ந்த கோபிநாத் ஆகிய 3 பேர் குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடியில் இருந்து கருவாடு ஏற்றி வந்த ஜோசப், மற்ற இருவரின் உதவியுடன் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, அதைத் தூத்துக்குடியில் உள்ள கோழிப்பண்ணைகளுக்குத் தீவனமாகக் கடத்த முயன்றபோது பிடிபட்டார்.

தொடர்புடைய செய்தி