நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில், விஜய்யின் தவெக கட்சி 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக கட்சியின் முக்கிய தலைவர்களின் வாரிசுகள் போட்டியிட்டு தோல்வியடைந்தனர். அந்த வகையில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகன் கவுதமசிகாமணி 10,581 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பை இழந்ததுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். தவெக வேட்பாளர் பரணி பாலாஜி இராண்டாம் இடத்தை பிடித்தார்.