விழுப்புரம் மாவட்டம் பள்ளித்தென்னல் கிராமத்தைச் சேர்ந்த 10ஆம் வகுப்பு மாணவி தர்ஷினி (16), பொதுத்தேர்வு கணிதப் பாடத்தில் தோல்வியடைந்ததால் மன உளைச்சலில் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். உறவினர்கள் அவரை புதுச்சேரி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.