விழுப்புரம்: பாமக மாம்பழ சின்னம் சர்ச்சை; தேர்தல் ஆணையத்தில் மனு

தைலாபுரத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற பாமக வழக்கறிஞர் சமூக நீதி பேரவையின் மாநில செயற்குழு கூட்டத்தில், பாமகவிற்கு மாம்பழ சின்னத்தை ஒதுக்க தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளதாக தலைவர் கோபு தெரிவித்தார். இந்த சின்னம் வழங்கப்படாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் என்றும், அன்புமணி ராமதாஸ் அனுமதி இன்றி பீகார் தேர்தலில் மாம்பழ சின்னத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம் சாட்டினார். பாமக புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தொடர்புடைய செய்தி