விழுப்புரம் மாவட்டம், வளவனூர் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் மற்றும் போலீசார், நேற்று ராம்பாக்கம் மாந்தோப்பு ஓடை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, டிராக்டர் டிப்பரில் மணல் கடத்தி வந்த, அதே கிராமத்தைச் சேர்ந்த சேகர் மகன் ஆனந்தராஜ், 29; என்பவரை கைது செய்தனர். தப்பியோடிய அருள்ஜோதி என்பவரை தேடி வருகின்றனர்