விக்கிரவாண்டி அருகே கத்தியை காட்டி மிரட்டிய ரவுடி கைது

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே சிறுவள்ளிக்குப்பம் பேருந்து நிறுத்தத்தில் அதிகாலை பொதுமக்களைக் கொடுவா கத்தியைக் காட்டி ஒருவர் மிரட்டியுள்ளார். மேலும், ஆபாசமாகத் திட்டி இடையூறு ஏற்படுத்தினார்.  இந்த சம்பவத்தில் ஈடுபட்ட மோகன்ராஜ் (22) என்ற ரவுடியை இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் தலைமையிலான போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி