விழுப்புரம்: செம்மண் குவாரி முறைகேடு வழக்கு..பொன்முடி நேரில் ஆஜர்

விழுப்புரம் மாவட்ட செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கெளதமசிகாமணி மற்றும் 7 பேர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று (நவ.11) ஆஜராகினர். குற்றப்பத்திரிக்கை வாசிக்கப்பட்ட நிலையில், பொன்முடி தரப்பினர் ஆட்சேபனை தெரிவித்தனர். நீதிபதி மணிமொழி இந்த வழக்கை வரும் நவம்பர் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் அனைவரும் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி