தைலாபுரம்: பாமக தொண்டர்களை மீண்டும் சந்திக்கிறார் ராமதாஸ்

சட்டப்பேரவைத் தேர்தலில் சசிகலாவின் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தும் வெற்றி பெறாத நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கட்சித் தொண்டர்களைச் சந்திக்க முடிவு செய்துள்ளார். தொண்டர்கள் தங்களின் குறைகளைத் தெரிவிக்கவும், இல்ல விழா அழைப்பிதழ்கள் அளித்து வாழ்த்துப் பெறவும், தைலாபுரம் தோட்ட இல்லத்தில் வாரத்தின் அனைத்து நாள்களிலும் காலை 10 மணி முதல் 12 மணி வரை மருத்துவர் ராமதாஸை நேரில் சந்திக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி