அப்போது, பக்கத்து கிராமங்களுக்கு அரசு நிவாரணம் வழங்கியுள்ளது. அதே போன்று எங்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் கிளியனூர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் கோட்டக்குப்பம் டி.எஸ்.பி., உமாதேவி விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதில், வருவாய்த்துறை அதிகாரிகள் விரைவில் விடுபட்டவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்குவதற்கு ஏற்பாடு செய்து வருவதாக உறுதி கூறினர். அதை ஏற்று பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். மறியலால் அந்தப் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.