வானூர் அருகே இளம்பெண் தற்கொலை போலீசார் விசாரணை

வானூா் வட்டம், சின்னமுதலியாா் சாவடி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ரவீந்திரன் மகள் நிஷா (23). பி.இ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்த இவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. வயிற்று வலி பிரச்னையால் அவதிப்பட்டு வந்த நிஷா செவ்வாய்க்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கோட்டக்குப்பம் போலீசார் புதன்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி