திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர் சந்திப்பில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மாவட்ட தலைநகரங்களில் இட ஒதுக்கீட்டை வலியுறுத்தி விரைவில் பிரம்மாண்ட போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தார். சாதி வாரி கணக்கெடுப்பை பாமக தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாகவும், தமிழ்நாட்டில் இன்னும் அது மேற்கொள்ளப்படவில்லை எனவும் கூறினார். இந்த போராட்டத்திற்கு அனைத்து சமுதாய மக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், வரும் டிசம்பர் 30ஆம் தேதி ஆத்தூர் அருகே தலைவாசலில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார். வரும் தேர்தலில் இளைஞர் சங்கத் தலைவர் தமிழ்குமரன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அருள் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்றும் ராமதாஸ் தெரிவித்தார்.