விழுப்புரம்: 3 நாட்களில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும் பாமக ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்ற பாமக துணை அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த நிறுவனர் ராமதாஸ், கட்சியின் 34 துணை அமைப்புகளையும் ஒருங்கிணைத்து வலுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், இன்னும் மூன்று நாட்களில் தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பாமகவின் கூட்டணி நிலைப்பாடு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி