தொடர் மழையின் காரணமாக திண்டிவனத்தில் நாளை (18.11.2025) நடைபெறவிருந்த வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், சார்பு அமைப்புகளின் நிர்வாகிகள் கூட்டமும், நாளை மறுநாள் (19.11.2025) நடைபெறவிருந்த இளைஞர் சங்க மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் கூட்டமும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கூட்டங்களும் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என பா.ம.க. தலைமையகம் (தைலாபுரம் தோட்டம்) தெரிவித்துள்ளது.