விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெறவிருந்த தமிழ்நாட்டு, புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் தொடர்பான வழக்கறிஞர் சமூக நீதிப் பேரவை நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. செயல் தலைவர் ஸ்ரீகாந்தி வெளியூர் பணியில் இருப்பதால் கூட்டம் ரத்தாகியதாகக் கூறப்படுகிறது. மாநில தலைவர் கோபு கூறுகையில், மார்ச் 30 அன்று நடைபெறும் தேர்தலுக்கு முன் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மீண்டும் கூட்டம் நடத்தப்படும் எனவும், வேட்பாளரை அவர் இறுதி செய்வார் எனவும் தெரிவித்தார். மேலும், வழக்கறிஞர் சமூகநீதி பேரவையை சொசைட்டி சட்டத்தில் பதிவு செய்ய உள்ளதாகவும், வழக்கறிஞர் பாலு டிரஸ்ட் சட்டத்தில் பதிவு செய்து மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் இல்லாத வகையில் பத்திரம் உருவாக்கியதாகவும், அன்புமணி இதை புரிந்துகொள்ள வேண்டும் எனவும் விமர்சித்தார்.