வளவனூர் அருகே விபத்தில் ஒருவர் இறப்பு

விழுப்புரம் மாவட்டம், விழுப்புரம் சங்கரமடம் தெருவை சேர்ந்தவர் ஸ்ரீராம் (64). விவசாயி. இவர், மே 9 காலை தனது எலக்ட்ரிக் பைக்கில், பண்ருட்டி மார்க்கத்தில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்தார். சுந்தரிப்பாளையம் பாலம் அருகே வந்தபோது, பின்னால் வந்த தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில், படுகாயமடைந்த ஸ்ரீராம் சம்பவ இடத்திலேயே இறந்தார். வளவனூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி