இதன் ஒரு பகுதியாக திருச்சிற்றம்பலம் வேளாண் விரிவாக்க மையத்தில் நெல் விதைகளை வேளாண்மை உதவி இயக்குநர் எத்திராஜ், விவசாயிகளுக்கு வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், 'சம்பா பருவ விதைகள் ரகம் 150 நாட்கள் வயது உடையது. அதிக நீர் தேங்கும் பகுதிகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் நடவு செய்ய சிறந்த ரகமாகும்.
சங்கராபரணி ஆற்றங்கரை ஓரம் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் உள்ள விவசாயிகள் இந்த ரகத்தை தேர்வு செய்து நடவு செய்யலாம். ஏக்கருக்கு 2500 கிலோ மகசூல் தரவல்லது. தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ் கிலோவிற்கு 20 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது' என்றார்.