மரக்காணம் வட்டம், அனுமந்தை கிழக்குக் கடற்கரை சாலையைச் சேர்ந்த பரமேஸ்வரி (46) செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு தாய் வீட்டிற்குச் சென்றார். மறுநாள் காலை வீடு திரும்பியபோது, பின்பக்கக் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த ₹35 ஆயிரம் திருட்டுப் போனது தெரியவந்தது. இதுகுறித்து மரக்காணம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.