வானுார் தொகுதிக்குட்பட்ட கிளியனுார் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்து பேசினார். ஒன்றிய செயலாளர்கள் ராஜி, புஷ்பராஜ், முன்னாள் எம்.எல்.ஏ., மாரிமுத்து முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய சேர்மன் சிவா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.