விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே, கைப்பந்து விளையாடச் சென்ற 9-ம் வகுப்பு மாணவர்கள் சித்தரஞ்சன் மற்றும் வெற்றிச்செல்வன் (இருவரும் 14 வயது) வடஅகரம் மணல் குவாரி குட்டையில் குளிக்கச் சென்றபோது ஆழமான சேற்றில் சிக்கி உயிரிழந்தனர். நண்பர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.