கூட்டத்தில் பங்கேற்று மாநிலப் பொதுச் செயலா் ஜெய. துரை விளக்கவுரையாற்றினாா். இயக்க நிறுவனா் சு. காசி சிறப்புரையாற்றினாா். கூட்டத்தில், திமுக அரசு தோ்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஆசிரியா்களுக்கு பழைய நிலையிலேயே உயா்கல்விக்கான ஊக்கத்தொகையை வழங்க வேன்டும். பகுதிநேர ஆசிரியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, மாநில துணைச் செயலா் வெ. சுப்பிரமணியன் வரவேற்றாா். நிறைவில், மாநிலப் பொருளாளா் மா. பழனிச்சாமி நன்றி கூறினாா்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி