கோட்டகுப்பத்தில் அரசுக்கு சொந்தமான நிலம் மீட்பு

கோட்டக்குப்பம் அடுத்த பொம்மையார்பாளையம் இ.சி.ஆர். சாலையில், அரசுக்கு சொந்தமான அரை ஏக்கர் நிலத்தில், 17 சென்ட் இடத்தை பொம்மையார்பாளையத்தை சேர்ந்த தனிநபர் ஒருவர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தார். இது குறித்து மாவட்ட கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மானுக்கு புகார் சென்றது. 

அந்த இடத்தை உடனடியாக மீட்கும்படி, கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார். அதன்படி, வானூர் தாசில்தார் வித்யாதரன், பொம்மையார்பாளையம் வி.ஏ.ஓ., சஷ்டி குமரன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், நேற்று (ஜூன் 6) அப்பகுதியை ஆய்வு செய்தனர்.

ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலியை, ஜே.சி.பி. இயந்திரம் மூலம் அகற்றினர். கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முத்துலட்சுமி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி