விழுப்புரம் ஆரோவிலில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் சர்வதேச நகரில் உள்ள கடைகள் மற்றும் உணவகங்களில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். உணவுப் பாதுகாப்புத் துறை விழுப்புரம் மாவட்ட நியமனஅலுவலர் எஸ். சுகந்தன், உணவுப் பாதுகாப்பு அலுவலர் கே. மோகன் ஆகியோர் ஆரோவில் சர்வதேச நகர வளாகத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டு, உணவுப் பொருள்களின் தரம் குறித்து பரிசோதனை செய்தனர். இதைத் தொடர்ந்து, ஆரோவிலில் உள்ள சோலார் கிச்சன், விருந்தினர் மையம், ஆரோ கேன்டீன், பிரெட் மற்றும் சாக்லேட் தயாரிப்புக் கூடம் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, பணியிலிருந்த சமையல் ஊழியர்களிடம் வெளிப்படையான தலைமுடி மூடிகள் அணிய வேண்டும். சுகாதாரமான முறையில் உணவுப்பொருள்கள் தயாரிப்புப் பணியில் ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

தொடர்புடைய செய்தி