விழுப்புரம்: டிரைவர் வெட்டிக் கொலை; 5 பேர் கொண்ட கும்பல் கைது

விக்கிரவாண்டி மதுரப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் கதிர்வேல், 47; திருவக்கரை கிரஷர் ஒன்றில் டிப்பர் டிரைவராக வேலை செய்தார். கடந்த 6ம் தேதி இரவு திருவக்கரையில் நடந்த தெருக்கூத்து நிகழ்ச்சியை பார்த்து விட்டு, அதிகாலை பைக்கில் கிரஷருக்கு திரும்பினார். கதிர்வேலை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், இருவர் குடியிருப்பு பகுதி அருகே, கதிர்வேலை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றது. வானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில், கதிர்வேல் பைக்கில் செல்லும் போது, அவரை ஒரு கும்பல் பின் தொடர்ந்து சென்றது தெரிய வந்தது. அக்காட்சிகளை வைத்து திருவக்கரை பகுதியைச் சேர்ந்த 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி