தொழில் போட்டி; வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்...போலீசில் புகார்

புதுச்சேரி அடுத்த நல்லவாடு சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் (46) வழக்கறிஞர். இவருக்கும், அனிச்சங்குப்பம் மீனவப்பகுதியை சேர்ந்த சேர்ந்த கபிலன்(28). என்பவருக்கும் வழக்கை வாதாடுவது தொடர்டாக பிரச்னை இருந்துள்ளது. கடந்த மாதம் 16ம் தேதி தர்மலிங்கம், தான் வாங்கிய புது காரை எடுத்துக்கொண்டு, புத்துப்பட்டு அய்யனாரப்பன் கோயிலில் பூஜை செய்வதற்காக சென்றுள்ளார்.

அப்போது, அங்கிருந்த கபிலனுக்கும், தர்மலிங்கத்திற்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த கபிலன், தர்மலிங்கத்தை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் நேற்று(அக்.2) கோட்டக்குப்பம் போலீசார் கபிலன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி