புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று பெரும்பாக்கம் பகுதியில் போலீசார் ரோந்து சென்றபோது, சந்தேகப்படும்படி, நின்றிருந்தவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர் இந்திரா நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ் மகன் சரண்ராஜ், 18; என்பதும், கிருஷ்ணமூர்த்தி நிலத்தில் காப்பர் ஒயர் திருடியதையும் ஒப்புக் கொண்டார். அதனைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப் பதிந்து சரண்ராஜை கைது செய்தனர்.