தொடர்ந்து, ரங்கநாதபுரம் ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்து, கட்டுமான பணியின் முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தனர். சேமங்கலம் ஊராட்சியில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின்கீழ், 11 விவசாயிகள் தரிசு நிலத்தில் சவுக்கு மரம் வளர்த்து வருவதையும் ஆய்வு செய்தனர்.
சப் கலெக்டர் வெங்கடேஷ்வரன், வேளாண் துறை இணை இயக்குநர் ஈஸ்வர், துணை இயக்குநர் சீனிவாசன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் பிரேமலதா, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுரேஷ். நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் பிரகாஷ், வானுார் தாசில்தார் வித்யாதரன், பி.டி.ஓ.க்கள் மணிவண்ணன், சுபாஷ்சந்திரபோஸ், திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் உட்பட பலர் உடனிருந்தனர்.