இந்த வழக்கில் அப்போதைய கனிம வளத் துறை அமைச்சரும், தற்போதைய வனத் துறை அமைச்சருமான க. பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில், விசாரணையின் போது ஒருவர் இறந்துவிட்டார். இந்த வழக்கு சனிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய நான்கு பேர் மட்டும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். அமைச்சர் க. பொன்முடி, பொன். கௌதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய மூவர் ஆஜராகவில்லை. மேலும், இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை விசாரித்த முதன்மை மாவட்ட நீதிபதி ஏ. அருள்மொழி, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்