விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே புதுப்பாக்கம் கிராமத்தில், கார்பெண்டராக வேலை செய்து வந்த தங்கமணி (37) என்பவர், இன்று காலை வீட்டு வாசலில் காய வைத்திருந்த துணியை எடுக்கும்போது மின் கசிவால் ஏற்பட்ட மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரம்மதேசம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.