படகின் முன் பகுதி சுமார் 20 அடி உயரத்திற்கு மேலே சென்றதால் அதிர்ச்சி அடைந்த, மூன்று மீனவர்களும் படகிலேயே தத்தளித்தனர். அலையில் சிக்கியதால் இஞ்சினும் பழுதானது. படகின் இன்ஜின் திடீரென நின்றதாலும் படகை இயக்க முடியாமல் மீனவர்கள் திணறினர். பின்னர் மூவரும் கடலில் விழுந்து, நீந்திய படியே கரைக்கு வர முயன்றனர். அவர்களை மீனவர்கள் கயிற்றின் மூலம் கரையேற்றினர். இதில், மூன்று பேருக்கும் கால்களில் காயம் ஏற்பட்டது. அவர்களை சக மீனவர்கள் மீட்டு, புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர்.
"இது மிரட்டல் அல்ல, ஒரு நல்வழிப்படுத்தும் முயற்சி”.. முதலமைச்சர் பேட்டி