முதல்வர் வில்லியம் தலைமை தாங்கி, மாணவிகளுக்கு இந்த காலக்கட்டத்தில் ஏற்படும் பிரச்னைகள், சவால்கள் மற்றும் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினார். என். எஸ். எஸ். அலுவலர் அருளதாஸும் வரவேற்றார். உதவி திட்ட அலுவலர் வீரசேகரன், வட்டார இயக்க மேலாளர் ராஜலட்சுமி, பாலின வள மைய மேலாளர் வரலட்சுமி, மாநில பயிற்றுநர் நாராயணவடிவு ஆகியோர் கலந்து கொண்டு, பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக எப்படி பாதிக்கப்படுகிறார்கள்,
மாதவிடாய் காலத்தில் சுகாதார ரீதியாக பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து பேசினர். இறுதியாக பாலின சமத்துவ உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். உதவிப்பேராசிரியர் அகஸ்தின் ஜார்ஜ் நன்றி கூறினார்.