விழுப்புரம்: பேசுவதை நிறுத்திய பெண்ணின் வீட்டிற்கு தீ வைத்த இளைஞர்

வானூா் வட்டம், பட்டானூா் நாவற்குளம் பகுதியைச் சோ்ந்த சி. ஷீலா(46) என்பவரின் வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. இதில், ரொக்கம், துணிகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன. இதுகுறித்து ஆரோவில் போலீஸாா் விசாரித்ததில், ஷீலாவுடன் 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்த புதுச்சேரி குயவா்பாளையத்தைச் சோ்ந்த நெ. கன்னியப்பன்(26) என்பவர், ஷீலா அவருடன் பழகுவதை தவிா்த்ததால் ஆத்திரமடைந்து பெட்ரோலை ஊற்றி தீ வைத்தது தெரியவந்தது. இதையடுத்து கன்னியப்பனை போலீசார் தேடி வருகின்றனா்.

தொடர்புடைய செய்தி