விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கம் ஒரத்தூர் சாலையில் நகை அடகு கடை நடத்தி வரும் மஞ்சுளா என்பவரின் கடையில், கடந்த மாதம் 21ஆம் தேதி மணிகண்டன் என்பவர் மோதிரம் வாங்குவது போல் நடித்து 32 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றார். இது குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்துள்ளனர்.