விழுப்புரம்: தவறான சிகிச்சையால் பெண் இறப்பு; பரபரப்பு

திருவெண்ணைநல்லூர், காந்திக்குப்பம் கிராமத்தில் வசிப்பவர் சரவணன் கௌசல்யா தம்பதியினர். நேற்று அதிகாலை 4 மணியளவில் கௌசல்யாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனை அடுத்து கௌசல்யாவை அழைத்துக் கொண்டு திருவெண்ணைநல்லூர் பகுதியில் உள்ள அகரம் எனும் 24 மணி நேர தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அருண்குமார் ஊசி போட்டு மாத்திரைகளை கொடுத்து சரியாகிவிடும் எனக் கூறி அனுப்பியதாக சொல்லப்படுகிறது. வீட்டிற்கு சென்ற கௌசல்யாவிற்கு மீண்டும் காலை 6 மணி அளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. 

பின்னர் அதே தனியார் மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் நலமாக இருப்பதாகவும் உங்களுக்கு ஏதேனும் ஆபத்து இருந்தால் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனை அடுத்து கௌசல்யாவை சரவணன் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்துள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த கௌசல்யா சிறிது நேரத்தில் சுயநினைவு இல்லாமல் சென்றுள்ளார். அதன்பின் 4.20 மணிக்கு உயிரிழந்துள்ளார். இதனை அடுத்து கௌசல்யாவின் கணவர் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையத்தில் தனது மனைவிக்கு தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததே இறப்புக்கு காரணம் என புகார் அளித்துள்ளார்

தொடர்புடைய செய்தி