சென்னை, ஓட்டேரியைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன் மனைவி ராமதிலகம், 54; இவர், வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு தனியாக சென்று வருவது வழக்கம். கடந்த 10ம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலை கோவிலுக்கு சென்று வருவதாக கூறி புறப்பட்டார். இந்நிலையில் நேற்று நள்ளிரவு 1: 00 மணியளவில் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மாமந்துார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாகச் சென்ற கார் மோதி ராம திலகம் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து ராமதிலகம் எதற்காக அங்கு வந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.