விழுப்புரம் நகரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சாலைகளைக் கடக்கும் பொதுமக்கள், குழந்தைகள், வாகன ஓட்டிகளை நாய்கள் துரத்தி கடிப்பது வாடிக்கையாகிவிட்டது. இதுகுறித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாய்கள் கடித்து காயப்படுத்துவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.