அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் கண்டாச்சிபுரம் பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் நேற்று தாக்கிய மாணவர்களை தனியார் பேருந்தில் இருந்து இறக்கித் தாக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் மாணவர்கள் எதற்காகத் தாக்கிக் கொண்டனர் என்பது குறித்தும், பிரச்சினையில் ஈடுபட்ட மாணவர்கள் யார் என்பது குறித்தும் வீடியோ காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ச்சியாக கண்டாச்சிபுரம் பகுதியில் இரண்டாவது நாளாகப் பள்ளி மாணவர்கள் தாக்கிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.