விழுப்புரம்: சாலை விபத்து.. உடல் நசுங்கி பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் இருந்து கொல்லிமலை நோக்கி சுற்றுலா சென்ற வேனில் 15 பேர் பயணம் மேற்கொண்டு உள்ளனர். திருக்கோவிலூரில் இருந்து செங்கனாங்கொல்லை புறவழிச்சாலை பேருந்து நிறுத்தம் அருகே வேன் வந்து கொண்டிருந்த போது, பல்லவாடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன்(55) மற்றும் மணிவண்ணன்(21) ஆகிய இருவரும் தலாக்குளம் பகுதிக்கு கீரை விற்பனை செய்வதற்காக கீரை மூட்டைகளுடன் இரு சக்கர வாகனத்தில் திருக்கோவிலூர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். 

இந்த இரண்டு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த ராமச்சந்திரன் மற்றும் மணிவண்ணன் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். அதேபோல விபத்தில் நிலை தடுமாறிய சுற்றுலாவேன் காலையிலேயே கவிழ்ந்து விபத்துக் கொள்ளானது. இந்த விபத்தில் வேனில் பயணித்த ஐந்து பேர் காயம் அடைந்து திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து திருக்கோவிலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிகாலையில் நடைபெற்ற இந்த விபத்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

தொடர்புடைய செய்தி