நகராட்சியில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கருத்துக் கேட்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் நகரமன்ற உறுப்பினர்கள், நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பொறியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அப்போது நகரமன்ற தலைவர் முருகன் நகர திட்டமிடல் அலுவலர் செந்தில்குமாரிடம் நகரின் பிரதான பகுதிகளில் பல்வேறு இடங்களில் வணிக வளாகங்கள் கட்டப்பட்டு வருகிறது. அதற்கு வடிவமைப்பு கொடுத்த திட்டம் பொறியாளர் யார்? என்று கேள்வி எழுப்பினார்.
ஏனென்றால் எந்த ஒரு வணிக வளாகத்திற்கும் முறையாக வாகன நிறுத்துமிடம் இல்லாமலேயே கட்டப்பட்டு வருகிறது. சொந்த இடங்களை தவிர்த்து சாலையை ஆக்கிரமித்து பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக நகரின் மையப்பகுதியில் கடுமையாக போக்குவரத்து நெரிசல் நிகழ்கிறது. இவ்வாறு கட்டப்படும் கட்டிடங்களுக்கு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கட்டிடங்களுக்கு வடிவமைப்பு கொடுத்த திட்ட பொறியாளர் யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.