திருக்கோவிலூர் அருகே மாடாம் பூண்டி கிராமத்தைச் சேர்ந்த ஆனந்தன்-ராஜேஸ்வரி தம்பதியினரின் மகன் விஷ்வா (17), பிளஸ்-2 முடித்து பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்திருந்தார். விஷ்வா தனது தந்தையின் வங்கி கணக்கு புத்தகத்தை தொலைத்துவிட்டார். இது குறித்து தாயிடம் கூறியபோது, அவர் கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஷ்வா, நேற்று முன்தினம் இரவு ஏரிக்கரையில் உள்ள புளியமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.